You are currently viewing அரசுக்கெதிரான சாத்வீகப்போராளிகள் மீது வன்முறை

அரசுக்கெதிரான சாத்வீகப்போராளிகள் மீது வன்முறை

mddr_letterhead_web

மே மாதம் 9ஆம் திகதி அலரி மாளிகையில்  இருந்து கட்டவிழ்த்துவிடப்பட்ட குண்டர் படை அலரி மாளிகைக்கு அருகிலும் காலிமுகத் திடலிலும் அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு மேலதிகமாக  கண்டி “கோட்டா கோ ஹோம்” கிராமம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பின்னர் நாடு பூராவும் இதற்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன.  வன்முறைச்  சம்பவங்ளையிட்டு எமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றோம். இதன் காரணமாக ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து இழப்புக்கள் தொடர்பாக நாம் பெரிதும் கவலைப்படுகின்றோம்.

ஆனால்,இச்சந்தர்ப்பங்களின்போது சட்டம் ஒரே வகையில்செயற்படவில்லை.

கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற கைதுகள் தடுப்புக் காவல்கள் இதனைத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன.வன்முறைச் சம்பவங்களோடு தொடர்படையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்து தடுத்துவைப்பதற்கு அரசு காட்டும் ஆர்வம் காலி முகத் திடலின் சாத்வீகமான ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக தாக்குதல் மேற்கொண்டவர்கள் மீது காட்டப்படுவதில்லை.அநேகமாக விசாரணைகளின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.

காலி முகத்திடலுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்களைக் கண்டித்தே நாட்டில் வன்முறைகள் ஏற்பட்டன என்பதை விசாரணையில் ஈடுபடும் பொலிசார்  மறந்துள்ளனர். ஒரு மாத காலத்திற்கும் அதிகமாக காலிமுகத்திடலிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் சாத்வீகமான அரசாங்க எதிர்ப்புப் போராட்டமே இடம்பெற்றது.எதுவிதமான வன்முறைச் சம்பவங்களும் அறிக்கையிடப்படவில்லை.சில அமைச்சர்களினதும் பிரமுகர்களினதும் வீடுகளின் முன்னே  ஆரப்பாட்டங்கள் இடம்பெற்றாலும்,அங்கு வன்முறைகள் இடம்பெறவில்லை.

அரசாங்கத் தலைவர்களால் தூண்டப்பட்ட குண்டர்களின் மனிதாபிமானமற்ற தாக்குதல்களினாலேயே  வன்றைகள் ஏற்பட்டன.இவ்வன்முறைகளுக்கு உயர் பொலிஸ் அதிகாரிகளின் ஒத்தழைப்பும்  கிடைத்தன என்பதற்கு பகிரங்க சாட்சிகள் உண்டு. அதுதொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவே தவிர மேலதிகமாக எதுவும் இடம்பெறவில்லை.

இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இலங்கைப்பொலிசார் சிறுகதை எழுத்தாளர்களினதும், கவிஞர்களினதும் ஆக்கங்கள் மூலம் மக்களைத் தூண்டியதாக, சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்தேச சமவாயத்தின்(International Convention on Civil & Political Rights) கீழ் பல வருடங்களாக எழுத்தாளர்ளைத் தடுத்து வைக்கப்பட்டமையும் எமக்கு ஞாபகத்திற்கு வருகிறது.அலரி மாளிகை மூலம்மேற்கொள்ளப்பட்ட வன்முறைத்தூண்டல் இதற்கு ஏற்புடையதாகாதா? என்தை அரசு தெளிவு படுத்தவேண்டும்.

இத்தகைய சட்டத்தின் பாரபட்சமான கொள்கை,வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதில் இலங்கை சனசமூகத்தினதும் சர்தேச சமூகத்தினதும் நம்பிக்கையை வெற்றிகொள்வதற்கு எவ்விதத்திலும் உதவப்போவதில்லை என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

ஒப்பம்/மகிந்த ஹத்தக்க
செயலாளர்

Leave a Reply