ஊடக அறிவித்தல்
திடசங்கற்பம்கொண்ட சமூக செயற்பாட்டாளரும், உறுதியான தொழிற்சங்கத் தலைவருமான, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை, அவரது தொழிற்சங்க அலுவலகத்தில் தானதோன்றித்தனமாகக் கைது செய்து, தடுப்புக்காவலில் வைத்திருப்தை, ஜனநாயக உரிமைகளை வெனறெடுப்பதற்கான இயக்கம் தனது கடும் கண்டனத்தைத்தெரிவிக்கின்றது. நோய்வாய்ப்பட்டிருக்கும் தோழர் ஸ்டாலினின் உடல்நிலைக்கு பொலிசாரும், அரசும்தான் பொறுப்புக் கூறவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோது, தோழர் ஜோசப் ஸ்டாலின் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற தொழிற்சங்கத் தலைவர் என்பதால், அவர் தடுத்து வைக்கப்படுவதை எதிர்த்தார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
பாரம்பரிய தொழிற்சங்கத் தலைவராகச் செயற்படாமல், தோழர் ஸ்டாலின், ஆசிரியர்களின் உரிமைகளுக்காகவும் மக்களின் வாழ்வுரிமைக்காகவும் துணிச்சலுடன் செயற்பட்டார். அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான மக்கள் எழுச்சியாக இருந்த காரணத்தால், காலிமுகத்திடலில் இடமபெற்ற போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். காலி முகத்திடலின் ஏனைய முக்கிய செயற்பாட்டாளர்களைப் போலவே, அவர் ஒருபோதும் வன்முறையை அங்கீகரிக்கவில்லை.
ஜே.ஆர்.ஜெயவர்தன ஆட்சியில் நிலவிய அடக்குமுறை மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சி முறையை ரணில் விக்கிரமசிங்க அமுல்படுத்தி வருகிறார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் போர்வையில், சமூகசெயற்பாட்டாளர்களை வேட்டையாட பாதுகாப்புப் படையினருக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கியுள்ளார். இக்கொள்கை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது என்பதை இந்த ஊழல்-மோசடி ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பொருளாதாரமும் நிர்வாகமும் மோசமாக வீழ்ச்சி அடைந்த நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை குறைந்தபட்ச அளவில், பராமரிக்க முடியாத அளவுக்கு, அனைவரின் உரிமைகளுக்கும் மதிப்பளித்து பராமரித்து, மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை அளிக்காமல், மக்களின் சார்பாகச்செயற்படும்செயற்படும்தொழிற் சங்கத்தலைவர்ளையும் சமூகச்செயற்பாட்டாளர்களையும் கைது செய்து தடுப்புக்காவலில் வைக்கப்படுதை தோற்கடிக்க வேண்டும் போராட்டத்தால் முன்னிலைப்படுத்தப்பட்ட உரிமைகளை வென்றெடுக்க மக்கள் அணிதிரள வேண்டும்.
ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கான இயக்கம் (MDDR)
- MEDICAL PROFESSIONALS IN SRI LANKA FOR SYSTEMCHANGE - October 12, 2022
- ජාතික වෘත්තික මධ්යස්ථානයේ මානව හිමිකම් ප්රකාශයක්.. - September 5, 2022
- සිසු දඩයම වහා නවත්වනු..! - August 24, 2022